சுடச்சுட

    
    ec

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்குகிறது. வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையாளர்களாக வரவுள்ளனர்.

    மக்களவைத் தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது.

    30-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), 31-ஆம் தேதியும் (தெலுங்கு வருடப் பிறப்பு) விடுமுறை நாள்கள் என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை வேட்புமனுதாக்கல் செய்யலாம்.

    வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, வாகனங்கள் சூழவோ வரக்கூடாது.

    100 மீட்டருக்குள்ளாக வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் 5 பேர் வர அனுமதிக்கப்படுவர்.

    ஏப்ரல் 1 முதல் தீவிரமாகும்:

    வேட்புமனு தாக்கல் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கினாலும், அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் வருவதால் ஏப்ரல் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்புமனுத் தாக்கல் செய்வது தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து பிரசாரத்துக்காக செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் கணக்கில் வரும்.

    வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க ஒரு மக்களவைத் தொகுதிக்கு இரண்டு பார்வையாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் ஓரிரு நாள்களில் தங்களது பணிகளைத் தொடங்குவார்கள் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மனு தாக்கல் முடிவடையும் தினமான ஏப்ரல் 5-ஆம் தேதி பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர் நியமனம் செய்யப்படுவர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: சென்னையில் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட சென்னை தொகுதிக்கு எம்.லட்சுமியும், மத்திய சென்னைக்கு அருண் சுந்தர் தயாளனும், தென் சென்னைக்கு ஆனந்த் குமாரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai