சுடச்சுட

  

  மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  By dn  |   Published on : 27th March 2014 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stalin_canvas1

  மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

  அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து அரக்கோணம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

  அரக்கோணம் தொகுதியில் முதலாக நெமிலி ஒன்றியம் சேந்தமங்கலத்திலும், தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியம் பெருமூச்சி ஊராட்சிக்குள்பட்ட வெங்கடேசபுரத்திலும் பேசினார்.

  பின்னர் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அவர் பேசியதாவது: நாங்கள் தேர்தலுக்காக மட்டுமே உங்களை நாடி வருபவர்கள் அல்ல.

  ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களைத் தேடி வருபவர்கள் நாங்கள்.

  திமுக ஆட்சியில் எவ்வளவோ பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக 2006-11இல் அரக்கோணம் தொகுதியில் தக்கோலம்-உரியூர் சாலையில் மேம்பாலம், அனந்தாபுரம் சாலையில் மேம்பாலம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக கட்டடம், அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் மேம்பாலம், அரக்கோணம் - திருத்தணி சாலையில் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஆனால், அதிமுக அரசின் சாதனை என்ன தெரியுமா? நாங்கள் போட்ட திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்துவதுதான். அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை அமைக்க திமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்றார் மு.க.ஸ்டாலின்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai