சுடச்சுட

  
  dmk

  காங்கிரஸ் கட்சிக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதுடன், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸýக்கு ஆதரவு தருவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கி வைத்து கருணாநிதி புதன்கிழமை பேசியது:

  ஆ.ராசா மீது எத்தனையோ குற்றச்சாட்டுகளைக் கூறினர். பல பூஜ்யங்களைப் போட்டு சொத்து சேர்த்தார் என்று கூறினர். இப்போது அந்த பூஜ்யங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக குறைந்து வருகிறது. எந்தக் குற்றமும் இப்போது நிரூபிக்கப்படவில்லை. எந்தக் குற்றமும் செய்யாத ராஜாவையும் திமுகவையும் பழிவாங்க வேண்டும் என்று அலைந்து, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் கட்சி நன்றியை மறந்து செயல்பட்டது. நன்றி என்றால்

  என்னவென்று தெரியாதவர்களாக காங்கிரஸார் செயல்பட்டனர். அப்படி நன்றி மறந்து நடந்துகொண்டதால்தான் காங்கிரஸ் தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது. நன்றியை மறக்கக்கூடாது. கடந்த காலங்களில் கைதூக்கி விட்டது யார் என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் திமுகவை அவர்கள் படுத்திய பாட்டைத்தான் இப்போது அவர்கள் அனுபவிக்கின்றனர்.

  இதே காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி மதச்சார்பற்ற நிலைக்குத் திரும்புவோம் என்று கூறினால், போனால் போகிறது என்று அவர்களை ஆதரிப்போம்.

  தீமைகளை மறந்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்போம்.

  அதே சமயம் நன்றியை மறந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அண்ணன், தம்பி, மனைவி, குழந்தைகள் என யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு திமுகவின் கொள்கைகள்தான் முக்கியம்.

  அதிமுகவுக்கு கண்டனம்: அண்ணா உருவாக்கிய இயக்கம் திமுக. அண்ணாவின் கொள்கையை திமுகவே பின்பற்றி வருகிறது. அண்ணாவை அறிந்தவன் நான். ஆனால் அண்ணா பெயரால் கொண்ட அதிமுக அண்ணாவை அறியாதது. அண்ணாவின் கொள்கையையும் பின்பற்றாத இயக்கம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முடக்க முயற்சித்தனர். புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினர். அப்படி மாற்றுவதற்கு காரணம் ஏதாவது சொல்ல வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதைத் தவிர வேறு ஒரு காரணமும் இதற்கு சொல்ல முடியாது.

  மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதை சத்துணவு திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றினார். சத்துணவு திட்டத்தை திமுக கைவிடவில்லை. மாணவர்களுக்கு முட்டைகளுடன் கூடிய ஊட்டச்சத்து வழங்கினோம். ஆனால் திமுக கொண்டு வந்த திட்டங்களை அதிமுக கைவிடுவது ஏன்?

  சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதல்வர்களுக்குக் கொடியேற்றும் உரிமை இல்லாமல் இருந்தது. இதற்காக இந்திரா காந்தியிடம் வாதிட்டேன். மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் கொடியேற்றும் உரிமை உள்ளது. அந்த உரிமை முதல்வர்களுக்கு இல்லாதது ஏன் என்று வாதிட்டேன். அதன் பிறகு என்னால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களுக்கு கொடியேற்றும் உரிமை கிடைத்தது. நான் கொடியேற்றினேன் என்பதற்காக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஜெயலலிதா ஏற்றாமலா உள்ளார்?

  ஒரு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதற்குப் பிறகு வரும் ஆட்சியிலும் கடைப்பிடித்தால்தான் நல்லாட்சியாக அமையும் என்றார் கருணாநிதி.

  முன்னதாக திமுக வேட்பாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), கிரிராஜன் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கி வைத்தார் கருணாநிதி.

  கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai