Enable Javscript for better performance
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியாக வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதும், குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் குடிநீருக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்கிழமை முதல் வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    வியாழக்கிழமை காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,452 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 17.18 டி.எம்.சியாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai