சுடச்சுட

    

    மேட்டூர் புதிய யூனிட்டில் இன்றுமுதல் மீண்டும் மின்உற்பத்தி

    By dn  |   Published on : 27th March 2014 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mettur

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 600 மெகாவாட் புதிய யூனிட்டில் வியாழக்கிழமை (மார்ச் 27) இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    இதையடுத்து, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு கூட இல்லாமல் நிலைமையைச் சமாளிக்க முடியும் என மின் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    கோடை தொடங்கியுள்ள நிலையில் மின் தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடை வெப்பம் உயரும்போது மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தித் தொடங்கினால் 400 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாக, கோடையின் உச்சத்தில் கூட மின்வெட்டு மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    பிரச்னை என்ன? இந்த யூனிட்டில் ஹைட்ரஜன் வாயு கசிவு காரணமாக மின் உற்பத்தி கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. புதிய யூனிட் சரிபார்க்கப்பட்டு அதில் சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதிக்கட்ட சோதனைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியுள்ளன. அனைத்தும் நன்றாக இயங்கினால் வியாழக்கிழமை இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். வெள்ளிக்கிழமை முதல் சீரான அளவில் மின் உற்பத்தியை எதிர்பார்க்கலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    279 மில்லியன் யூனிட்டுகளாக உயர்வு: மின் பயன்பாடு செவ்வாய்க்கிழமை மிக அதிக அளவாக 279 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. முன்னதாக, திங்கள்கிழமைதான் (மார்ச் 24) அதிகபட்ச பயன்பாடாக 271 மில்லியன் யூனிட்டுகள் இருந்தது. இதை மிஞ்சும் வகையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) 279 மில்லியன் யூனிட்டுகளாக மின் பயன்பாடு உயர்ந்துள்ளது.

    சென்னை, வல்லூர் போன்ற இடங்களில் உள்ள புதிய யூனிட்டுகள் சிறப்பாக செயல்படுவதே மின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதற்குக் காரணம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai