சுடச்சுட

    

    ராணுவத்தை விமர்சிக்கும் ஜெயலலிதா மீது நடவடிக்கை வேண்டும்

    By dn  |   Published on : 27th March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    elongavan

    ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதன்கிழமை கூறினார்.

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். திருப்பூர் பின்.என்.சாலை புஷ்பா திரையரங்கு அருகில் காங்கிரஸ் வேட்பாளர் தலைமை தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதைத் திறந்துவைத்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது:

    தேர்தல் பிரசார மேடைகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து பேசிவருகிறார். சீனா, பாகிஸ்தான் ராணுவங்களை விட இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என அவர் கூறிவருகிறார்.

    உண்மைநிலை என்னவென்றால், இந்திய ராணுவம் வலுவாக உள்ளது. ஆசிய நாடுகளிலேயே

    ராணுவத்திற்கு அதிகளவிலான பணத்தை செலவிடுவது இந்தியா தான். அதுமட்டுமல்ல, அதிகளவிலான ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளன. பாகிஸ்தான், சீன ராணுவங்களைவிடவும் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளன.

    இந்திய ராணுவத்தை விமர்சிப்பது என்பது அல்லது பலவீனமாக இருக்கிறது என சொல்வது தேசவிரோத செயலாகும். எனவே, தமிழக முதல்வர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    நரேந்திர மோடியால் பிரதமர் ஆக முடியாது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai