சுடச்சுட

  
  rmstemple

  ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது.

  உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வெளிமாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

  தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகின்றன.

  மார்ச் மாதத்துக்கான உண்டியல் எண்னும் பணி வியாழக்கிழமை திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

  உண்டியல்களில் ரொக்கம் ரூ.50 லட்சத்து 38 ஆயிரத்து 726ம், 36 கிராம் தங்கமும், 4 கிலோ 170 கிராம் வெள்ளியும் இருந்தது.

  உண்டியல் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர் ராஜாங்கம், ககாரின் ராஜ், பேஸ்கார் ராதா, அண்ணாத்துரை, நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மாரியப்பன், துரை, குமரேசன், செல்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai