சுடச்சுட

    

    விநாயகா மிஷன்ஸ் பல்கலை. வேந்தர் சண்முகசுந்தரம் காலமானார்

    By dn  |   Published on : 27th March 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vinayakamision_university

    சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சண்முகசுந்தரம் (75) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த அருணாசலம்- பார்வதி அம்மாள் ஆகியோருக்கு மகனாக கடந்த 7.7.1939-இல் பிறந்த ஏ.சண்முகசுந்தரம், சேலத்தில் குடியேறி மருந்து விற்பனைத் தொழிலைத் தொடங்கினார்.

    கடந்த 1981-இல் சேலத்தில் கல்வி நிறுவனத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சேலம், புதுவை, சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி, கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி, அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியர் பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவம், பொறியியல், பிசியோதெரபி, நர்சிங், பாரா மெடிக்கல், கலை அறிவியல், கல்வியல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தார்.

    கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சண்முகசுந்தரம், அரியானூர் விநாயகா மிஷன்ஸ் ஹைடெக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் அவர் காலமானார்.

    சண்முகசுந்தரத்துக்கு மனைவி அன்னபூரணி, சரவணன், கணேசன் என்ற மகன்களும், அருணாதேவி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர். சண்முகசுந்தரத்தின் உடல் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

    கருணாநிதி இரங்கல்: சண்முகசுந்தரம் மறைவுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஆன்மிக பிரசாரம் செய்து தமிழ் வளர்த்த கிருபானந்தவாரியாரின் முயற்சியால் எழுந்த பல கல்வி நிறுவனங்களை திறம்பட நடத்தியவர் சண்முகசுந்தரம்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai