Enable Javscript for better performance
வேட்பாளர்கள் உறுதிமொழிப் பத்திரங்களை ஆன்-லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர்கள் உறுதிமொழிப் பத்திரங்களை ஆன்-லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    By dn  |   Published on : 27th March 2014 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveenkumar

    மக்களவைத் தேர்தல் வேட்புமனுவின் போது, உறுதிமொழி பத்திரங்களை விருப்பத்தின்படி, இணையதளத்திலும் தாக்கல் செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    வேட்பாளர்கள் இணையதளம் மூலமாக உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரியை (ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்)யன்படுத்தலாம். அதில், ர்ய்ப்ண்ய்ங் ள்ன்க்ஷம்ண்ள்ள்ண்ர்ய் ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்ள் ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ள் என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் முத்திரைத்தாளில் அச்சு எடுப்பதற்கான முறையில் அது வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    பிரமாண ஆணையாளர் அல்லது நோட்டரி பப்ளிக் அல்லது மாஜிஸ்திரேட் அதிகாரம் கொண்டவர்கள் முன்னிலையில் உறுதிமொழிப் பத்திரத்தினை தயார் செய்து அதற்குரிய கட்டணத்துடன் முத்திரைத் தாளில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உறுதிமொழி தாக்கல் செய்யப்பட வேண்டும். சான்று அளிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

    வேட்புமனு நிராகரிப்பைத் தடுக்கலாம்: இணையதளம் மூலமாக வேட்பாளர்களே உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யும் போது அதனை சரியாகப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆன்-லைன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை அச்சு எடுத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய பத்திகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அந்த விண்ணப்பங்களை இணையதளம் ஏற்றுக் கொள்ளாது. இதன்மூலம், பத்திகள் சரியாக பூர்த்தி செய்யப்டாமல் இருந்து அதனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

    இரு மொழிகளில் அளிக்கலாம்: உறுதிமொழிப் பத்திரத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியாக சமர்ப்பிக்கலாம். இவ்வாறு இணையதளம் மூலம் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்வதால் வேட்பாளருக்கு கூடுதல் செலவு ஏதும் ஏற்படாது.

    இணையதளத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் அச்சு எடுத்த பிறகும் பார்த்துக் கொள்ளலாம். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யும் முன்புவரை, இணையதள பதிவில் மாற்றங்களைச் செய்யலாம்.

    யாரை அணுகலாம்: இணையதள பதிவின் போது நிர்வாக தொடர்பான விளக்கங்களுக்கு ள்ன்ல்ல்ர்ழ்ற்ஹச்ச்ண்க்ஹஸ்ண்ற்ஃங்ஸ்ரீண்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியையும், தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்களுக்கு 011-23052043 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai