Enable Javscript for better performance
2-ஆவது வேட்பாளர் பட்டியல்: ஆம் ஆத்மி இன்று வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை (மார்ச் 27) அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், மத்திய சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 17 தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.

    இதில், வட சென்னை, தென் சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai