சுடச்சுட

    
    ganesan_vijayakanth

    ஊழலின் மொத்த உருவமாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

    தென் சென்னை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது:

    தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக மக்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஊழலே செய்யவில்லை என பிரசாரம் செய்கிறார். 2ஜி, நிலக்கரி சுரங்கம், ஆதர்ஷ், காமன்வெல்த் இந்த ஊழல்கள் எல்லாம் எந்த ஆட்சியில் நடைபெற்றன என்பதை அவர் விளக்க வேண்டும். ஊழலின் மொத்த உருவமாக திகழும் ப.சிதம்பரம் இவ்வாறு கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழக மக்கள் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களது கண்ணீரைத் துடைக்க நரேந்திர மோடியால்தான் முடியும்.

    என்னை விமர்சித்து 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்ற கட்சிகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் என்னுடன் நடித்தவர்கள். என்னைப் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் உண்மையைப் பேச வேண்டும். அதிமுகவுடன் ஒரு காலத்தில் இணக்கமாக இருந்தேன். ஆனால் மக்கள் பிரச்னையை எடுத்துக் கூறினால் அவர்கள் விரோதியாக பார்க்கிறார்கள்.

    திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விட்டன. நாடு முழுவதும் மாற்றம் ஏற்பட நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்றார் விஜயகாந்த்.

    பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய செயலர் தமிழிசை செüந்தரராஜன், தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai