Enable Javscript for better performance
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

    By dn  |   Published on : 28th March 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக விளங்கி வரும் ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று.

    இங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வரலாறுகாணாத அளவுக்கு பூண்டி ஏரி வறண்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஜனவரி மாதம் திறக்கப்பட்ட தண்ணீர், மார்ச் 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

    இதனிடையே நிறுத்தப்பட்ட தண்ணீரை மீண்டும் திறந்துவிடும்படி ஆந்திர மாநில அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்த நடத்தி வந்தனர்.

    இதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai