சுடச்சுட

    

    இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மார்ச் 30 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பிரசார பயண விவரம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

    ஜி.ராமகிருஷ்ணன்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 10 வரை, கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், விழுப்புரம், வட சென்னை, கடலூர், பாண்டிச்சேரி.

    மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்: ஏப்ரல் 3 முதல் 22 வரை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, வட சென்னை, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி.

    அ.சௌந்தரராசன்: மார்ச் 29 முதல் ஏப்ரல் 5 வரை, கோவை, திருவள்ளூர், வட சென்னை.

    கே.பாலகிருஷ்ணன்: மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 வரை, கடலூர், தஞ்சாவூர், மதுரை, நாகை, வட சென்னை, விழுப்புரம், திருச்சி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்: ஏப்ரல் 3 முதல் 21-ஆம் தேதி வரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வட சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கடலூர், புதுச்சேரி, தஞ்சாவூர், நாகை ஆகிய தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பிரசாரம் செய்கிறார்.

    வரும் சனிக்கிழமை (மார்ச் 29) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai