சுடச்சுட

  

  மதச் சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், தவறுகளுக்காக காங்கிரஸ் கட்சி மனம் வருந்தினால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றும், கருணாநிதி கூறியிருப்பதை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு வரவேற்றுள்ளார்.

  சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வேட்பாளர் மோகன் குமாரமங்கலத்தை ஆதரித்து, கே.வீ.தங்கபாலு பேசியது:

  எங்களது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு செய்த நலத் திட்டங்களைக் கூறி, நாங்கள் வாக்கு சேகரிப்போம்.

  முன்னாள் முதல்வர் கருணாநிதி எனது நண்பர். தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் தங்கபாலு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai