சுடச்சுட

    

    காங்கிரஸின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு பாஜக துணைபோனது: டி.கே. ரங்கராஜன்

    By dn  |   Published on : 28th March 2014 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RangarajanTK

    காங்கிரஸின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாஜகவும் துணை போனது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    மத்தியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு பல்வேறு விஷயங்களில் மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்தன. அதனால், பிரசாரத்தின் போது பாஜகவைத் தாக்கி பேசவில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், மாநிலங்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற, காங்கிரஸýக்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால், பாஜகவின் ஆதரவு தேவைப்பட்டது.

    புதிய ஓய்வூதிய திட்டம், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பாஜகவின் ஆதரவோடுதான் காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றியது.

    தாராள பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் பல்வேறு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸýக்கு பாஜகவும் துணை போனது. காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பொருளாதார கொள்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. அதனால், அதிமுகவால் பாஜகவை விமர்சிக்காமல், காங்கிரûஸ விமர்சிக்க முடியாது.

    காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாஜக ஆதரவாக செயல்பட்டதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்தபோது, பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நெய்வேலி பங்குகளை விற்றபோது அதை பாஜக எதிர்க்கவில்லை. பாஜகவை விமர்சிக்காமல் இருப்பதன் மூலம் காங்கிரஸின் பொருளாதார கொள்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது போலாகிவிடும்.

    ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியை விமர்சித்துள்ளது. மேலும், அதிமுக பாஜகவுக்கு ஆதரவளித்தால், அதன் மதசார்பின்மை நிலைக்கு பாதிப்பு ஏற்படும்.

    பாஜகவை எதிர்க்க அதிமுக முன்வரவில்லையென்றால், தேர்தல் அறிக்கையில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற முடியாது என்று டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai