தலைமைச் செயலக கட்டட முறைகேடு: விசாரணை ஆணையத்தின் காலம் நீட்டிப்பு
By dn | Published on : 28th March 2014 02:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பாக எழுந்துள்ள முறைகேட்டினை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் காலம் மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், அந்த ஆணையத்தின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பொதுத் துறை செயலாளர் யத்தேந்திர நாத் ஸ்வைன் அண்மையில் வெளியிட்டார்.
திமுக ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் எழுந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.