சுடச்சுட

  

  திருச்செந்தூர் பயணியர் விடுதி சாலையை சீரமைக்க விடுதி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

  By சுப்பிரமணியன்  |   Published on : 28th March 2014 07:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruchendur

  திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பயணியர் விடுதி சாலையை சீரமைக்க வேண்டுமென விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

  இது குறித்து திருச்செந்தூர் நகர விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் தங்கராஜ், செயலர் அருள்ராஜா ஆகியோர் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன், வட்டாட்சியர் ப.நல்லசிவம், டிஎஸ்பி சௌ.கோவிந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா ஆகியோரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :

  நாங்கள் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் பக்தர்களை நம்பியே தொழில் புரிந்து வருகின்றோம். திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பயணியர் விடுதி சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பாதாளசாக்கடைத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். மேலும் இப்பாதையின் வழியாகத்தான் தாலுகா காவல்நிலையம், மகளிர் காவல்நிலையம், நீதிமன்றங்கள், பொதுப்பணித்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவலர்குடியிருப்பு, எல்.ஐ.சி. அலுவலகம், சார்நிலைக்கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமைப்பள்ளி ஆகியன உள்ளன.

  பாதாளசாக்கடைத்திட்டப்பணியால் பயணியர் விடுதிசாலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் மேற்சொன்ன அலுவலகங்களுக்கு செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே அரசு, தக்க நடவடிக்கை எடுத்து, கோடை விடுமுறையில் அதிகளவில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை கருத்தில்கொண்டு, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்னதாக சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். அல்லது அச்சாலையில் வாகனம் செல்லும்படியாக பாதையினை ஒழுங்குபடுத்திட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  நிகழ்ச்சியின் போது, விடுதி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் பி.சந்திரன், பொருளாளர் மூ.ரமணி,  நிருவாக குழு உறுப்பினர்கள் கிட்டன், குறிஞ்சி டி.எஸ்.சுரேஷ், மாணிக்கம், ராஜன், சந்திரசேகரன், ரங்கநாதன், சுப்புராலு, ஐயப்பன், மாணிக்கம், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai