சுடச்சுட

    

    தேர்தலுக்குப் பின் மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரும் நிலை வராது: இல. கணேசன்

    By dn  |   Published on : 28th March 2014 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    elongavan_canvas1

    மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது என பாஜக மூத்த தலைவரும் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான இல. கணேசன் தெரிவித்தார்.

    சென்னை மெரீனா கடற்கரையில் வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

    ஆட்சியில் இல்லாத கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் செய்வோம் என வாக்குறுதி அளிப்பார்கள். மக்களும் அவர்களை சோதித்துப் பார்ப்பதற்காக வாய்ப்பு கொடுக்க நினைப்பார்கள். ஆனால், 60 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகால மன்மோகன் சிங் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் 10 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். இதற்கெல்லாம் மக்கள் மயங்க மாட்டார்கள்.

    தேர்தலுக்குப் பிறகு யாருக்கு ஆதரவு என்பது குறித்து அதிமுகவும் திமுகவும் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மக்கள் தனிப்பெரும்பான்மையை அளிப்பார்கள்.

    எனவே, தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரும் நிலை பாஜகவுக்கு ஏற்படாது. எனவே, ப. சிதம்பரத்துக்கு அந்தக் கவலையெல்லாம் வேண்டாம் என்றார் இல. கணேசன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai