சுடச்சுட

  
  elongavan

  காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றியை மறந்தவர் கருணாநிதிதான் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, எந்தக் குற்றமும் செய்யாத ஆ.ராஜாவையும் திமுகவையும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி நன்றியை மறந்து செயல்பட்டது.

  அதனால்தான் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் அதலபாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

  இது குறித்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  காங்கிரஸ் நன்றியை மறந்து விட்டதாக கருணாநிதி கூறியிருக்கிறார். 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தயவில்தான் திமுக ஆட்சி நடந்தது. கருணாநிதி முதல்வராக இருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவில்தான் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினரானார்.

  இதனை எல்லாம் அவர் மறந்து விட்டார். நன்றி மறந்தது கருணாநிதிதானே தவிர காங்கிரஸ் அல்ல. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடம் கருத்துக்கள் கேட்ட பிறகே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

  10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல பாஜக தலைவர்கள் இதனை குறை கூறியுள்ளனர். காங்கிரûஸ குறை சொல்வது மட்டுமே பாஜகவின் வேலையாக உள்ளது. கடந்த இரு தேர்தல்களைப்போல இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.

  தவறான பிரசாரம்: தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவதால் மூத்த தலைவர்கள் தேர்தலைப் புறக்கணித்து விட்டதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அது உண்மையல்ல. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால் ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை.

  கடந்த 6 மாதங்களுக்கு முன்பே கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ப.சிதம்பரம் அறிவித்தார். அதனை செயல்படுத்தும் வகையில் தேர்தலில் போட்டியிடாமல் மகனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அரசியலுக்கு புதியவர் அல்ல. பல ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருப்பவர் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai