சுடச்சுட

  

  "பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் இல்லை'

  By dn  |   Published on : 28th March 2014 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gnadesigan

  யாரிடமும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ஆட்சியில் தொடர்வதற்காக நன்றி மறந்த காங்கிரஸýக்கு பொதுமன்னிப்பு அளித்து, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

  இது காங்கிரஸ் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இது குறித்து ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  ஆட்சியில் தொடர்வதற்காக காங்கிரஸ் நன்றி மறந்து விட்டதாக திமுக தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். அதற்காக காங்கிரஸýக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் மீதான திமுகவின் கோபத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

  யாரிடமும் பொதுமன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் கட்சி எந்த வகையில் திமுகவுக்கு துரோகம் இழைத்தது என்பதை கருணாநிதி பட்டியலிட்டால் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்.

  தேர்தலுக்கு முன்பு கூட்டணி மாறுவது திமுகவின் வழக்கம் என்றார் ஞானதேசிகன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai