சுடச்சுட

  
  jaya

  மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மதுரையில் அக் கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (மார்ச் 28) பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து, நகர், ஊரகப் பகுதிகளில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சுற்றுச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்குப் பேசுகிறார். இதையடுத்து, சுற்றுச்சாலைப் பகுதியில் அமைக்கப்பட்ட மேடை உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  மதுரை தவிர தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரைக்கு தனி விமானம் மூலம் வரும் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட இடத்துக்கு வருகிறார். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமருகே தாற்காலிக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

  முதல்வர் ஜெயலலிதா பேசும் மேடை, ஹெலிகாப்டர் தளம் மற்றும் பொதுமக்கள் அமரும் பகுதியை சிறப்பு பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருகின்றனர். சிறப்பு மருத்துவப் பிரிவினர் மேடை பகுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.

  வெளி மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸார் நிறுத்தப்படுகின்றனர். மேடை மற்றும் ஊரகப் பகுதியில் 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி கூறினர்.

  முதல்வர் ஜெயலலிதா பேசும் மேடை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வெடிகுண்டு பிரிவினர் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai