சுடச்சுட

  

  வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 78 பார்வையாளர்கள்: பிரவீண்குமார் தகவல்

  By dn  |   Published on : 28th March 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  praveen_kumar

  மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 78 பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

  வேட்புமனு தாக்கல் தொடங்கும் தினத்தில், பார்வையாளர்கள் தங்கள் பணிகளைத் தொடரவுள்ளதாக அவர் கூறினார்.

  மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பிரவீண்குமார் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

  தேர்தல் பிரசாரம் முடியும் தினமான ஏப்ரல் 22- ஆம் தேதி மாலையில் இருந்து வாக்குப் பதிவு நிறைவடையும் நாளான ஏப்ரல் 24- ஆம் தேதி இரவு வரை தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வாக்காளர்கள் ஒரு தரப்பினருக்கு சாதகமாக வாக்களிக்க மதுபான பாட்டில்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

  இதையடுத்து, அதிகமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுபான பாட்டில்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து, இரு மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை 29-இலிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  78 பார்வையாளர்கள்: மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதிக்கு இரண்டு செலவினப் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனால், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 78 பார்வையாளர்கள் தங்களது பணிகளை வரும் சனிக்கிழமையில் இருந்து தொடங்க உள்ளனர். அவர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.

  செலவினப் பார்வையாளர்களுக்கு தனியாக செல்போன் எண்கள் வழங்கப்படும்.

  வேட்புமனு தாக்கல்: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுக்களை உறுதிமொழிப் பத்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் நேரில் வர வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் சார்பில் முன்மொழிபவரே மனுதாக்கலையும் செய்யலாம். ஆனால், வேட்பாளரிடம் இருந்து சான்று அளிக்கப்பட்ட கடிதத்தை அளிப்பது அவசியமாகும் என்றார் பிரவீண்குமார்.

   

  பார்வையாளர்களின் பட்டியல்

   

  பார்வையாளர்களின் பெயர்களுடன் அவர்களது சொந்த மாநிலம் அடைப்புக்குறிக்குள்

  தரப்பட்டுள்ளது.

  1. திருவள்ளூர்-அஜய் டோகே (மகாராஷ்டிரம்), அகிலேந்திர பிரதாப் யாதவ் (உ.பி.,)

  2. வட சென்னை-பி.ராஜாராம் (ஆந்திரம்), வெங்கட ரவி (ஆந்திரம்)

  3. தென் சென்னை- கே.பாலகிருஷ்ணா (ஆந்திரம்), ராஜீவ் பென்ஜ்வால் (தில்லி)

  4. மத்திய சென்னை-பி.சி.எஸ்.நாயக் (ஆந்திரம்), ராமகிருஷ்ண பண்டி (ஆந்திரம்)

  5. ஸ்ரீபெரும்புதூர் -பாரத் ஆர்.அத்லே-(மகாராஷ்டிரம்), பவானி சங்கர் (தில்லி)

  6. காஞ்சிபுரம்-வி.கோபிநாத்-(ஆந்திரம்), டி.பிரசாத ராவ் (ஆந்திரம்)

  7. அரக்கோணம்-பிரதீப் குமார் சுமன் (கர்நாடகம்), கே.சி.தாஸ் (ஆந்திரம்)

  8. வேலூர்-கே.என்.சுரேஷ் பாபு (ஆந்திரம்), கே.இ.சுனில் பாபு (ஆந்திரம்)

  9. கிருஷ்ணகிரி-எச்.ஆனந்தா (கர்நாடகம்), மதன் திர்மான்பலி (ஆந்திரம்)

  10. தருமபுரி-ரவி கிரண் (ஆந்திரம்), எம்.ரவீந்திர சாய் (ஆந்திரம்)

  11.திருவண்ணாமலை-வி.டி.ஜரோண்டி (மகாராஷ்டிரம்), மகேஷ்குமார் (ராஜஸ்தான்)

  12. ஆரணி-மனோஜ்குமார் (ஆந்திரம்), பி.வி.சுப்பா ராஜூ (ஆந்திரம்)

  13. விழுப்புரம்-பிரதீப் குமார் (பஞ்சாப்), பிரதீப் குமார் மஜூம்தார் (மேற்கு வங்கம்)

  14.கள்ளக்குறிச்சி-எஸ்.ஏ.பசுல்லா (ஆந்திரம்), சிதல் சி.எச்.தாஸ் (மேற்கு வங்கம்)

  15. சேலம்-பிஜோய் குமார் (ஒரிசா), டி.சதீஷ் (ஆந்திரம்)

  16. நாமக்கல்-புர்னா எம்.செர்லா (ஆந்திரம்), லால் பகதூர் யாதவ் (உ.பி.,)

  17. ஈரோடு-லோகேஷ் குமார் (மத்தியப் பிரதேசம்), எம்.கே.சர்மா (மத்தியப் பிரதேசம்)

  18. திருப்பூர்-எம்.ஆர்.ஆர்.ரெட்டி (ஆந்திரம்), எம்.எஸ்.ரெட்டி (ஆந்திரம்)

  19. நீலகிரி-ஜி.நரேஷ் (ஆந்திரம்), என்.நரேஷ் (ஆந்திரம்)

  20. கோவை-மோகன் ராவ்(ஆந்திரம்), இம்தியாஸ் அகமது (ஆந்திரம்)

  21. பொள்ளாச்சி-ரஞ்சன் பிரகாஷ் (பிகார்), வி.பி.சிங்(உ.பி.,)

  22. திண்டுக்கல்-வெங்கடேஸ்வர ராவ் (ஆந்திரம்), சஞ்சய் லாவனியா (உ.பி.,)

  23. கரூர்-சஞ்சய் சர்மா (உ.பி.,), ஜியோவணி (கோவா)

  24. திருச்சி-சத்யஜித் சிங் (உ.பி.,) சிவபிரகாஷ் (கர்நாடகம்)

  25. பெரம்பலூர்-சித்தலிங்கேஷ் (கர்நாடகம்), வி.பி.வர்மா (உ.பி.,)

  26. கடலூர் - மயங்க் பிஸ்ட் (உத்தரகண்ட்), விநாயக் பட்(கர்நாடகம்)

  27. சிதம்பரம் - சாது சுந்தர்சிங் தசி (ஆந்திரம்), கே.ஆர். அபிஷேக் ஆனந்த்ராவ் (ஆந்திரம்)

  28. மயிலாடுதுறை - ஏ.கே.பங்காலியா (ராஜஸ்தான்), பி.எஸ்.முண்டேரியா (தில்லி)

  29. நாகப்பட்டினம் - அஜய்குமார் (ஜார்கண்ட்), ருச்சிர் மிட்டல் (உ.பி.)

  30. தஞ்சாவூர் - சமீர் குமார் தே (மேற்கு வங்கம்), டி.மதன்மோகன் (ஆந்திரம்)

  31. சிவகங்கை - பிரஜென் டோலே (அசாம்), கே.வி.ரங்கநாதன் (ஆந்திரம்)

  32. மதுரை - சுமிதா பரமதா (ஆந்திரம்), ரோசி அகர்வால் (உ.பி.)

  33. தேனி - குமார் சிங் (பிகார்), சுதீப் குமார் பத்ரா (மேற்கு வங்கம்)

  34. விருதுநகர் - ஏ.கே.ஜெனா (ஒரிசா), ஏ.கே.திவாரி (உ.பி.)

  35. ராமநாதபுரம் - வித்யா ரத்தன் கிஷோர் (ஜார்கண்ட்), வினய் சின்ஹா (ஜார்கண்ட்)

  36. தூத்துக்குடி - சுஷாந்த் குமார் (பிகார்), வசீம் உர் ரஹ்மான் (உ.பி.)

  37. தென்காசி - ஐ.மரியண்ணா (ஆந்திரம்), ஆர்.சி. சேத்தன் (கர்நாடகம்)

  38. திருநெல்வேலி - அஜோய் பணிக் (மேற்கு வங்கம்), பி.விஜய் (ஆந்திரம்)

  39. கன்னியாகுமரி - ஆனந்தகுமார் பரோ (அசாம்), ஆனந்த் பாஸ்கர் (உ.பி.)

  வெளி மாநிலங்களைச் சேர்ந்த 78 செலவினப் பார்வையாளர்களும், வரும் சனிக்கிழமை முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் பணியாற்ற உள்ளனர்..

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai