சுடச்சுட

  
  jaya2

  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் கே.பால்ராஜ் மனைவியுடன் மதுரையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

  மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் கே.பால்ராஜ், அவரது மனைவி வெங்கடலட்சுமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய முதல்வர், நலம் விசாரித்தார்.

  இதைத் தொடர்ந்து, தமிழக ஒலிம்பிக் சங்கத் தலைவர் சோலை எம்.ராஜா, திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜி.என்.அன்புச்செழியன், ஆர்.செல்வின்ராஜ், திமுக வழக்குரைஞர் நந்தகோபன், தேமுதிக முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர்கே பாலயோகி, விடுதலைச் சிறுத்தைகள் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி ஏ.சுந்தர்ராஜன், பாமக மகளிரணிச் செயலாளர் சாந்தி கர்ணன், திமுக பிரமுகர் என்எஸ்ஆர் மோகன், தேமுதிக நிர்வாகிகள் எஸ்.ரவி, எஸ்ஆர் குமார், திருஞானசம்பந்தன் உள்ளிட்ட 3,770 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

  இவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai