சுடச்சுட

    

    "இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்'

    Published on : 29th March 2014 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    p-chidambaram

    இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    மதுரை செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

     

    மதச்சார்பற்ற கூட்டணியை திமுக ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறாரே?

    காங்கிரஸ் கட்சி மதச்சார்புள்ள கட்சிகளுடன் எப்போதும் சேர்ந்தது கிடையாது. மதச்சார்பற்ற ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற கட்சிகள் இடம் பெறும் என்று கருணாநிதி கூறிய கருத்தை வரவேற்கிறேன்.

     

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனவே?

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்ட ஒரு சில நிமிஷங்களில் பாஜக தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அது 30 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை. அதை எப்படி உடனே படிக்க முடியும்? படிக்காமலேயே விமர்சனம் செய்துள்ளனர்.

     

    நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    காங்கிரஸின் முழு சக்தியை பயன்படுத்தி வெற்றிக்காக பாடுபடுவோம். தேர்தலில் 5 முனைப்போட்டி இருப்பதால் தமிழகத்தில் எதிர்பாராத திருப்பங்கள், முடிவுகள் வரலாம்.

     

    ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காதது ஏன்?

    ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் உள்ள கட்சிகளும் ஒற்றுமை இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

    அதிமுக பொதுக்கூட்டங்களில் இந்த தீர்மானம் நம்பகத்தன்மை இல்லாதது. அதனால் இந்தியா எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

    இந்த விவகாரத்தில் ஒரு நிலையான முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. இப்படி ஒற்றுமை இல்லாத கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசு நடுநிலையான முடிவை எடுத்து இருக்கிறது. இருந்தாலும் 23 நாடுகள், இந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்கின்றன. இந்தியாவும் ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் வெளியுறவுத் துறை எடுத்த முடிவு இது. அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். உலக நாடுகளிடையே இதைப் பற்றி நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வகையில் விசாரணையை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai