சுடச்சுட

    

    இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுவிப்பு

    By dn  |   Published on : 29th March 2014 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை விடுவித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து மார்ச் 27 ஆம் தேதி தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த பிரவீண், பால்பாண்டி, தேவசகாயம், நம்புரெத்தினம் ஆகியோரது படகுகளில் 19 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

    சிறை பிடிக்கப்பட்ட 19 மீனவர்களையும் இலங்கை மன்னார் காவல் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

    மீனவர்கள் 19 பேர் மீதும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவர்களை ஏப்ரல் 4ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, 19 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 19 மீனவர்களையும் மாலையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறையிலிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர். விடுதலையான மீனவர்கள் ஒருசில நாள்களில் ராமேசுவரம் திரும்புவார்கள் என மீனவக் குடும்பத்தினரும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai