சுடச்சுட

  

  காப்பீட்டு பிரீமியம் குறைப்பு: லாரி உரிமையாளர்கள் வரவேற்பு

  By dn  |   Published on : 29th March 2014 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மிக அதிகளவில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகையை காப்பீட்டு ஒழுங்குமுறை, வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏ) குறைத்து மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  காப்பீட்டு ஒழுங்குமுறை, வளர்ச்சி ஆணையம் சார்பில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் தொகையை 20,000 முதல் 40,000 கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ.14,974-லிருந்து 54.1 சதம் உயர்த்தி ரூ.23,075 ஆகவும், 40,000 கிலோ எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.15,035-லிருந்து 111 சதம் உயர்த்தி ரூ.31,724 ஆகவும் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.

  இதையடுத்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஐஆர்டிஏக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், உயர்த்தப்பட்ட காப்பீட்டு பிரீமியம் தொகையைக் குறைக்க வேண்டும். இல்லையெனில், மாநிலம் தழுவிய லாரிகள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

  இந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செலுத்த வேண்டிய லாரிகளுக்கான காப்பீட்டு பிரீமியம் தொகையை 20,000 முதல் 40,000 கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ.16,471ஆகவும், 40,000 கிலோ எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.16,539ஆகவும் சற்றுக் குறைத்து ஐஆர்டிஏ மறுஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  இதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai