Enable Javscript for better performance
குழந்தையின் சடலத்தை கடித்துக் குதறிய தெருநாய்கள்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தையின் சடலத்தை கடித்துக் குதறிய தெருநாய்கள்

    By dn  |   Published on : 29th March 2014 03:23 AM  |   அ+அ அ-   |    |  

    tlrhospital

    திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் சடலத்தை அங்குள்ள தெருநாய்கள் கடித்துக் குதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒரு குழந்தையின் சடலத்தை அங்குள்ள நாய்கள் சூழ்ந்து குதறிக் கொண்டிருந்தன.

    இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், நாய்களை துரத்திவிட்டு குழந்தையின் சடலத்தை மீட்டனர். தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அங்கு வந்து குழந்தையை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    விசாரணையில், வெங்கலை அடுத்த திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பிரசவத்துக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அன்று இரவு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மருத்துவமனையில் அனைத்து நடைமுறைகளையும் முடித்தப் பின்னர் மார்ச் 26-ஆம் தேதி அவர்களை மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் செய்து அனுப்பியுள்ளனர். அப்போது குழந்தையின் சடலத்தை அவர்கள் மருத்துவமனையில் குழந்தைகள் வார்டுக்கு பின்புறமுள்ள முள்புதரில் வீசியதாகத் தெரிகிறது. அந்த குழந்தையைதான் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது.

    முள் புதர்களை அகற்ற கோரிக்கை: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இதுபோல் பல இடங்களில் முள் புதர்கள் உள்ளதால் அதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களே மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதாகக் கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனைத் தடுக்க திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும் என அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தெருநாய்கள் தொல்லை... திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அந்த தெருநாய்கள் அனைத்தும் குறிப்பாக குழந்தைகள் வார்டு மற்றும் பிரசவ வார்டு பகுதிகளில்தான் சுற்றித் திரிகின்றன.

    மேலும் இரவு நேரங்களில் அங்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை துரத்துகின்றன.

    எனவே அரசு மருத்துவனையில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp