சுடச்சுட

    

    ஜம்மு தீவிரவாத தாக்குதலில் திருக்கோவிலூர் ராணுவ வீரர் சாவு

    By dn  |   Published on : 29th March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dead

    ஜம்முவில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த முகையூரைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் அந்தோனி நிர்மல்விஜி (31). இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த அவர் விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பணிக்குத் திரும்பினார்.

    ÷ஜம்முவில் ஆர்ட்லரி யூனிட்டில் பணிபுரிந்து வந்த இவர், வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இவரது உடல் தனி விமானம் மூலம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு சொந்த கிராமத்துக்கு எடுத்து வரப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    ÷உயிரிழந்த அந்தோனி நிர்மல்விஜிக்கு, பவுலின் நிர்மலா (27) என்ற மனைவியும், நிர்மல் சபரினா (6), நிர்மல் ஜோஸ்னா (3) என்ற மகள்களும் உள்ளனர்.

    தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம், முகையூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai