சுடச்சுட

    

    "ஜெயலலிதா பிரதமரானால் இரும்புத் தாது வெட்டி எடுப்பது தடுக்கப்படும்'

    By dn  |   Published on : 29th March 2014 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bunrotti_ramachandran

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் திருவண்ணாமலையில் தனியார் நிறுவனம் இரும்புத் தாது வெட்டி எடுப்பது தடுக்கப்படும் என பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

    திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை இரவு தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்துப் பேசுகையில், பூமிக்கு அடியில் உள்ள கனிம வளத்தை வெட்டி எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. நெய்வேலியில் உள்ள நிலக்கரியைக் கூட மத்திய அரசுதான் வெட்டி எடுக்கிறது.

    இதுபோல, வனத் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவண்ணாமலையை அடுத்த கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதி கோரியுள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபல காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

    மத்திய காங்கிரஸ் அரசின் அனுமதியோடு அவர் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயல்கிறார். இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமரானால் ஒரே ஒரு கையெழுத்தில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதை தடை செய்து விடுவார் என்றார்.

    முன்னதாக, நடிகர் ஆனந்தராஜ் பேசினார். கூட்டத்தில், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆர்.கமலக்கண்ணன், வேட்பாளர் ஆர்.வனரோஜா

    உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai