சுடச்சுட

  

  தருமபுரியில் அன்புமணிக்கு பிரசாரம்: சேலம் பாமக முடிவு

  By dn  |   Published on : 29th March 2014 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arul

  சேலம் மக்களவைத் தொகுதியில் தேமுதிக போட்டியிடும் நிலையில், சேலம் பாமகவினர் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் அன்புமணி ராமதாஸýக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணி துணைச் செயலர் ரா.அருள் தெரிவித்தால் தேமுதிகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  பாமக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ரா.அருள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், பாஜக கூட்டணியில் சேலம் மக்களவைத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து அருளின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். மேலும், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

  இந்த நிலையில், கட்சித் தலைமை சமாதானம் செய்ததை அடுத்து, ரா.அருள் சேலம் மக்களவைத் தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்தார்.

  தற்போது, தேமுதிகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் சேலம் வந்த சுதீஷ், முதலில் அருளின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், பாமக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், சேலம் நான்கு சாலை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெள்ளிக்கிழமை காலை தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை அருள் கூட்டினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அருள் பேசியது:

  கட்சித் தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தது முதல் சுமார் 150 நாள்கள் எனக்காக இரவு, பகல் பாராமல் நீங்கள் வேலை செய்தீர்கள். ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சேலம் தொகுதி நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. கூட்டணி தர்மத்துக்காக நாம் விட்டுக் கொடுத்துவிட்டோம். எனக்கு சேலம் தொகுதியைப் பெற்றுக் கொடுக்க அன்புமணி ராமதாஸ் அரும்பாடுபட்டுள்ளார். அந்த நன்றியை நான் மறக்கமாட்டேன். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

  அதற்காக நீங்கள் கடுமையாகப் பணிபுரிய வேண்டும். அன்புமணிக்கு ஆதரவாக நான் தருமபுரியில் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார் ரா.அருள்.

  சேலம் தொகுதியில் தேமுதிக போட்டியிடும் நிலையில், பாமக தொண்டர்களை தருமபுரி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு ரா.அருள் கூறியிருப்பது தேமுதிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai