சுடச்சுட

  
  alagiri

  மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகிய இருவரும் மதுரை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை தனி அறையில் சந்தித்துப் பேசினர்.

  மதுரை விமான நிலையத்தில் காலை 9.40 மணிக்கு சென்னையிலிருந்து வந்த தனியார் விமானத்தில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் ஆகியோர் வந்தனர். அதே விமானத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னன் ஆகியோர் வந்தனர். பின்னர், மதுரை விமான நிலையத்தில் தனி அறையில் ப. சிதம்பரம் மற்றும் மு.க. அழகிரி ஆகிய இருவரும் சுமார் 5 நிமிடம் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காஞ்சிராங்குளம், முக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக கிளம்பிச் சென்றார். மு.க. அழகிரி தனது வீட்டுக்குச் சென்றார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai