Enable Javscript for better performance
இலங்கை விவகாரம்: கருணாநிதி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    
    karunidhi

    இலங்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு திமுகவுக்கு துணிவு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக்கூட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற கருணாநிதிக்கு துணிவு இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தப் பயத்துக்குக் காரணம் தன்னலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினேன். அதைக் காரணம் காட்டித்தான் 1991-ஆம் ஆண்டு திமுக ஆட்சி இரண்டாம் முறையாகக் கலைக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றினேன்.

    என்னைக் கேள்விக் கேட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு சில கேள்விகள்: 1981-களில் இலங்கை தமிழர்களுக்காக மறியல் போராட்டம் நடத்தியதில் கைது செய்யப்பட்டேன்.

    1985-இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டேன்.

    இதுபோல் ஜெயலலிதா சிறையில் இருந்துள்ளாரா? ஆட்சியை இழந்துள்ளாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai