சுடச்சுட

  

  "ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இல்லை; அச்சம்தான் உள்ளது'

  By dn  |   Published on : 30th March 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pchidambaram

  ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இல்லை; அச்சம் ஏற்பட்டதன் காரணமாகவே அவர் வான்வழியே வந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

  சிவகங்கையில் உள்ள அவரது எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறார்.

  அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வான்வழிப் பயணமாக ஹெலிகாப்டர் மூலம் சென்று தேர்தல் பிரசாரம் செய்துவரும் ஒரே முதல்வரும் அவர்தான்.

  எனவே, பிரசார மேடையில் பாடும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலை அவர் பாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  தமிழ்நாட்டில் பா.ஜ.க.-வுக்கு என வாக்குகள் கிடையாது. ஆனால், பா.ஜ.க.-வுக்கு காவடி தூக்குவதற்காக 3 கட்சிகள் களம் இறங்கியிருக்கின்றன. பா.ஜ.க 2 முகம் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு முகம். அது வல்லபபாய் படேலால் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் முஸ்லிம்கள் ஒருவர்கூட உறுப்பினர் கிடையாது. அரசியல் முகமாக பா.ஜ.க. உள்ளது.

  குஜராத்தில் 3 சட்டபேரவைத் தேர்தல், 3 மக்களைவைத் தேர்தல் என இவற்றில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட பா.ஜ.க. நிறுத்தியதில்லை. இந்த நிலையில், மோடி மதச் சார்பற்ற தலைவராக அனைத்து மதத்தினரையும் எப்படி அரவணைத்துச் செல்வார்? அதேபோல், பா.ஜ.க. உ.பி மாநிலத்தில் போட்டியிடும் 80 தொகுதிகளில் ஒன்றில்கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை. தலித் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு உள்ளதால், அந்த சமுதாயத்தினரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்னை விமர்சித்துப் பேசியது குறித்து கேட்கிறீர்கள், அவரது பேச்சைசெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார் ப. சிதம்பரம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai