சுடச்சுட

  
  bunrotti_ramachandran

  தேமுதிக-பாமக கூட்டணி எடுபடாது; பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

  அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரியை ஆதரித்து ஆற்காட்டில் பிரசாரப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது: மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி தோற்கும். அந்தக் கட்சிக்கு சுமார் 80 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து மத்தியில் புதிய ஆட்சியை அமைப்பார்கள்.

  அந்த வாய்ப்பை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடந்து வருகிறது. மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளன.

  புதிய மின்திட்டங்கள் அமைக்க மத்திய அரசு உதவி செய்யவில்லை. எனவே தில்லி அதிகாரம் நமக்கு வேண்டும். இல்லையேல் அதிகாரம் இருக்கும் இடத்துக்கு நாம் செல்ல வேண்டும். தேமுதிக, பாமக கூட்டணி மக்களிடம் எடுபடாது. ஜெயலலிதா பிரதமரானால் விலைவாசி குறையும் என்றார் அவர்.

  கூட்டத்தில் முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம், மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.சி. ஏழுமலை, நகர் மன்றத் துணைத் தலைவர் கீதா சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai