சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல் புகார்: அன்புமணி உள்பட 3 பேர் மீது வழக்கு

    By dn  |   Published on : 30th March 2014 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மக்களவைத் தொகுதியில், தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் சிடி விநியோகித்த புகாரின் பேரில், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உள்பட மூவர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி அருகே மதிகோன்பாளையம், குரும்பட்டி பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நத்தம் காலனி, மரக்காணம் பகுதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட பிரசார சிடிக்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக வட்டாட்சியர் குணசேகரனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவர் நடத்திய விசாரணையில், பிரசார சிடி விநியோகித்தது தெரிய வந்தது. இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், மாவட்டச் செயலாளர் அரசாங்கம் ஆகியோர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், விநியோகிக்கப்பட்ட 10 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai