சுடச்சுட

  
  nomination1

  மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட திருநங்கை பாரதி கண்ணம்மா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

  மதுரை விளக்குத்தூண் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி கண்ணம்மா. 53 வயதான இவர், அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள இவர், சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சக திருநங்கைகள், சில வழக்குரைஞர்களுடன் வந்தார்.

  மதுரை மாவட்ட ஆட்சியரும் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியுமான இல.சுப்பிரமணியனிடம் முதல் நபராகச் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  திருநங்கைகள் என்றாலே ஆடல், பாடலுக்கு மட்டும்தான் என்ற மனநிலைக்குத் தள்ளிவிட்டனர். இதை மாற்றி, நாங்களும் மக்கள் பணியாற்றவும் அரசியலில் முக்கியத்துவம் பெறவும் இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். தொடர்ந்து தமிழகத்தின் பல தொகுதிகளில் எங்களது சகாக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai