சுடச்சுட

  
  gramakrishnan

  மனித மலத்தை மனிதன் அள்ளும் முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

  இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும், மனித மலத்தை மனிதனே அள்ளக்கூடிய கொடுமை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமை பல வடிவங்களில் இன்றும் நீடித்து வருகிறது.

  மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போது இந்தப் பணியில் உள்ளவர்களை முற்றாக விடுவித்து, அவர்களின் குடும்பங்களுக்கு புனர்வாழ்வு அளித்திட பல வகைகளில் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இத்தீர்ப்பை உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

  1993-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இப்பணியைச் செய்யும்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்பதோடு, இதனை உடனடியாக அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai