Enable Javscript for better performance
மோடி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும்: விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    மோடி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுப்படுத்தப்படும்: விஜயகாந்த்

    By dn  |   Published on : 30th March 2014 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijayakanth_canvas2

    நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    சென்னை ஆதம்பாக்கத்தில் சனிக்கிழமை ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தே.மு.தி.க. வேட்பாளர் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியது:

    குஜராத்தில் நேர்மையான முறையில் மோடி ஆட்சி செய்ததால்தான் அவரை மக்கள் 3-ஆவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். இதுபோல் நேர்மையான, ஊழல் இல்லாத ஆட்சி மத்தியில் அமைய மோடிக்கு வாக்களித்து அவரைப் பிரதமராக்க வேண்டும். இங்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிமுகவும் ஏற்கெனவே ஆட்சி செய்த திமுகவும் ஊழல் செய்வதில் சமமாக உள்ளனர்.

    முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்துக்கு வந்தால் போலீஸ் கூட்டம்தான் அதிகம். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். நான் வருகிறேன். எந்தப் பாதுகாப்பும் கிடையாது. மக்களுடன் ஊரையாடுகிறேன். மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்து அவரைப் பிரதமராக தேர்ந்தெடுங்கள். அவர் பிரதமரானால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். டீசல், பெட்ரோல் விலை குறையும். இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமையும்.

    தற்போது ஸ்ரீபெரும்புதுôர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அரக்கோணத்தில் எம்.பி.யாக இருந்தபோது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரை இந்தத் தேர்தலில் தோற்கடிக்கச் செய்ய வேண்டும். இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் காமராஜுக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மாசிலாமணிக்கும் ஆதரவு அளித்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai