Enable Javscript for better performance
\\\"அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிய பாஜக மதவாத கட்சியா?\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்கிய பாஜக மதவாத கட்சியா?'

    By dn  |   Published on : 31st March 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ஜ.க ஆட்சியில்தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது எப்படி பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று கூறமுடியும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

    ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் காமராஜ் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாசிலாமணி ஆகியோரை ஆதரித்து சென்னை பழவந்தாங்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் பேசியது:

    தமிழக மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். மோடி பிரதமராக பதவியேற்று 2 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எல்லா வசதியும் கிடைக்க வழி செய்வேன். தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் சரி, ஆண்ட தி.மு.க வும் சரி இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் எப்படி மக்கள் நலனின் அக்கறை செலுத்துவார்கள்.

    குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள் தாராளமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு உணவுப் பொருள் விநியோகத்தில் ஊழல் கிடையாது. அங்கு இலவச பொருள்கள் எதுவும் கிடையாது. நேர்மையான ஆட்சி நடக்கிறது.

    புதுவையில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று தமிழக முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லாத போது இவர்கள் புதுச்சேரியைப் பற்றி எப்படி குறை சொல்ல முடியும்.

    நரேந்திர மோடி எல்லாத் தரப்பு மக்களிடமும் நேரடியாகத் தொடர்பு வைத்திருப்பதால் தவறுகள் நடப்பது கிடையாது.

    ஆகவே, குஜராத் சிறந்து விளங்குகிறது. குஜாரத் 15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தமிழகம் 10 சதவீதம் பின்தங்கியுள்ளது. வாஜ்பாய் ஆட்சியில்தான் தங்க நாற்கரச் சாலை இணைப்பு கொண்டு வரப்பட்டது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நல்ல சாலை அமைத்தது வாஜ்பாய் அரசுதான் என்றார் விஜயகாந்த்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai