சுடச்சுட

  
  vaiko

  "இனம்' படத்தை திரையரங்க உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இனம் திரைப்படம் ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் மறைமுக உதவியுடன்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

  இந்தப் படம் தமிழகத்தில் திரையிடுவது என்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலுக்கு ஒப்பானதாகும். எனவே, தமிழகத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் தமிழ் இனத்தை இழிவுபடுத்த முனையும் "இனம்' என்ற திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai