சுடச்சுட

    

    இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை நபர்களுக்கு தொடர்பு?

    By dn  |   Published on : 31st March 2014 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் இருந்து விசைப்படகில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சந்தேகமடைந்துள்ளனர். இதுதொடர்பாக தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இலங்கையில் இருந்து விசைப்படகு மூலம் ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்ட 20 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கன்னிராஜபுரம் என்ற இடத்தில் வைத்து சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கையைச் சேர்ந்தவர் உள்பட 6 பேரை கைது செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, பிடிபட்ட தங்கம் இலங்கையில் இருந்து விசைப்படகு மூலம் ராமநாதபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து சென்னைக்கு சாலை வழியாக கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்ததும், இலங்கையைச் சேர்ந்த சிலர் தங்கத்தை சென்னைக்கு கடத்திச் சென்று விற்கத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைதான 6 பேரும் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு தங்கத்தை படகில் கொண்டுசெல்லும் பணியை செய்ததாகவும், தங்கக் கட்டிகளை கொடுத்தவர்கள் பற்றியும், யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற தகவல்களையும் தெரிவிக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இருப்பினும், சென்னையைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்கு இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். அதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் மேலும் சில தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai