சுடச்சுட

    

    இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் ராமேசுவரம் வந்தனர்

    By dn  |   Published on : 31st March 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 19 பேரும் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வந்தனர்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து மார்ச் 27-ஆம் தேதி பிரவீண், பால்பாண்டி, தேவசகாயம், நம்புரெத்தினம் ஆகியோரின் படகில் கடலுக்குச் சென்ற பாண்டி, கதிரேசன், முனியசாமி, மருதநாயகம், தனவேல், தமியான், பிரேசன், பிரபா, குபல்தாஸ், மதியழகன், நாகேஸ்வரன், பாண்டி, குணசேகரன், மிக்கேல், அந்தோணிசாமி, கோவிந்தராஜ், சாக்ரடீஸ், கிளாம்டன், முனியசாமி ஆகிய 19 மீனவர்களையும் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஏப்ரல் 8-ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், சிறையிலிருந்த மீனவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து சிறையிலிருந்த மீனவர்களை மார்ச் 28 ஆம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 19 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் அழைத்து வந்து சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். 19 மீனவர்களும் ராமேசுவரம் துறைமுகப் பகுதிக்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

    விடுதலையாகி வந்த மீனவர்கள் தெரிவித்தது: நாங்கள் இரண்டு நாள்களில் விடுதலையாவோம் என எதிர்பார்க்கவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்ததால் சிறையிலிருக்கும் 98 இந்திய மீனவர்களையும் இலங்கை அரசு விடுவித்துள்ளது என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai