சுடச்சுட

    

    கன்டெய்னர் விழுந்து கார் நொறுங்கியது: டாக்டர் உள்பட இருவர் சாவு

    By dn  |   Published on : 31st March 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வண்டலூர் அருகே கார் மீது கன்டெய்னர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

    தாம்பரம் பெத்தல் நகரைச் சேர்ந்தவர் யோகன் (72). ஓய்வுபெற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி (68).

    இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.

    இவர்களுடன் மகள் விஜயலட்சுமி பிரியா (38), மருமகன் பாஸ்கர் (42) மற்றும் இவர்களின் மகள் கீர்த்தனா (13) ஆகியோரும் இருந்தனர். இவர்களில் பாஸ்கர் (42) வேலூர் நகராட்சியில் பொறியாளராக உள்ளார். விஜயலட்சுமி பிரியா சென்னை குயின்மேரீஸ் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிகிறார்.

    வண்டலூர் அருகே சென்றபோது, கன்டெய்னர் ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மோதியது. இதில் அந்த லாரியின் கன்டெய்னர் சரிந்து காரின் மீது விழுந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரும் அங்கு வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களில் சிகிச்சைப் பலனின்றி டாக்டர் யோகன், பாஸ்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.

    பலத்த காயமடைந்த நிலையில் கிருஷ்ணகுமாரி, விஜயலட்சுமி பிரியா, சிறுமி கீர்த்தனா ஆகிய 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai