சுடச்சுட

    

    கருணாநிதியையும், திமுகவையும் காப்பாற்றியது காங்கிரஸ்தான்

    By dn  |   Published on : 31st March 2014 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thangabalu1

    கருணாநிதியையும், திமுகவையும் காப்பாற்றியது காங்கிரஸ் தான் என்று கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.செல்லக்குமாரை அறிமுகப்படுத்தி கே.வீ.தங்கபாலு பேசியது:

    நாட்டில் மதவாதக் கட்சிகள் வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.

    தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சி நன்றியை மறந்துவிட்டது; அவர்கள் தவறுகளை எண்ணி, மனம் வருந்தினால் வருங்காலத்தில் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளதால் அவர் இவ்வாறு பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சிதான் கருணாநிதியையும், திமுகவையும் காப்பாற்றி உள்ளது. மனசாட்சி உள்ளவர்களுக்கு இது தெரியும்.

    தமிழக முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின்றி யாரும் அரசியல் நடத்த முடியாது.

    மக்களவைத் தேர்தலில் 72 சத இளைஞர்கள் ராகுல் காந்தியை ஆதரித்து வாக்களிப்பர்.

    கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நல்லவர்தான். ஆனால், நல்ல கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டமானது காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை வேட்பாளர் ஏ.செல்லக்குமாரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜ குமரவேல், கோபிநாத் எம்எல்ஏ, பல்லவன் கிராம வங்கியின் இயக்குநர் ஏகம்பவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai