சுடச்சுட

  

  காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதன் வெளிப்பாடாகத்தான் அக்கட்சி விரக்தியில் செயல்படுகிறது என்று தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன் கூறினார்.

  சென்னை சைதாப்பேட்டையில் ஆதாரம் அமைப்பு சார்பில் "இந்தியாவைக் காக்க இலக்கியவாதிகள்' என்ற இலக்கியக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெற்றது. இதில், தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் விரக்தியில் செயல்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மோசமாகப் பேசியுள்ளார். இது மக்கள் மத்தியில் மோடிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கும். முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என ப.சிதம்பரம் கூறியிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்றால் ராஜ்நாத் சிங் கூறியது போல, ஆட்சி அமைப்பதற்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தேமுதிகவும் பாமகவும் ஒற்றுமையாகத்தான் உள்ளன. சேலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளதும் அதன் வெளிப்பாடுதான்.

  உடல் நிலை சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் மகிழ்ச்சியாக தான் உள்ளார் என்றார் இல.கணேசன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai