சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், சங்ககிரியில் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 1,805 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சங்ககிரி அருகேயுள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வேளாண் உதவி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், அந்த ஆட்டோவில் உரிய ஆவணங்களின்றி 1,805 இலவச சேலைகள் இருந்தது தெரிய வந்தது.

    அந்தச் சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலர்கள் உதவித் தேர்தல் அலுவலர் வி.ரங்கநாயகியிடம் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் பூர்ணா எம்.சரளா பார்வையிட்டார்.

    இலவச சேலைகள் சங்ககிரி பகுதிகளில் நெசவு செய்யப்பட்டு, ஈரோட்டிலுள்ள விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில் உரிய ஆணவங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai