சுடச்சுட

  

  சேலம் பெரமனூர் பகுதியில் பாமக பிரமுகரின் காரை அடித்து உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பெரமனூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பி.அன்பு (52). அஸ்தம்பட்டி பகுதி பாமக துணைச் செயலராக உள்ளார். இவருக்குச் சொந்தமான கார், தனியார் நிறுவனம் மூலம் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இளைஞர்கள் அந்த காரை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காரின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைந்தன. கண்ணாடியை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கல் போன்றவை காருக்குள்ளேயே கிடந்தது தெரிய வந்தது.

  இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸூக்கு அன்பு தகவல் தெரிவித்தார். மேலும், தகவலறிந்த தேமுதிக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன், பாமக பிரமுகர்கள் மு.கார்த்தி, கதிர்.ராசரத்தினம் உள்ளிட்டோர் அன்புவை சந்தித்துப் பேசினர்.

  மேலும், காரை பார்வையிட்ட அவர்கள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai