சுடச்சுட

  

  தமிழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்ட கண்டலேறு அணை கிருஷ்ணா நதி நீர் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தடைந்தது.

  சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி மொத்தம் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும்.

  இந்த ஏரியிலிருந்து இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த ஆண்டு கடுமையான கோடை வெப்பம், பருவமழை பொய்த்தல், காளாஹஸ்தி அருகே உப்பலமடுகு அணையில் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரத்திலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் வருவது தடைப்பட்டது.

  இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் வெறும் 230 மில்லியன் கனஅடி வரை மட்டுமே ஏரியில் நீர் இருப்பு இருந்தது. இதையொட்டி வரலாறு காணாத அளவு வறட்சியை பூண்டி ஏரி சந்தித்தது.

  இந்த நிலையில் ஜனவரி 10-ஆம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் வரை வந்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நதி நீரும் தீடீரென நிறுத்தப்பட்டது.

  இதனால் 500 மில்லியன் கனஅடி வரை உயர்ந்த பூண்டி ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வெறும் 100 மில்லியன் கனஅடி நீர்மட்டுமே இருப்பு இருந்தது.

  இதனால் கடந்த வாரத்தில் பூண்டி ஏரியில் மீன்வளத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வந்த ஒன்றரை டன் மீன்குஞ்சுகளும் இறந்தன.

  ஏற்கெனவே ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வரை ஆந்திர மாநிலத்தில் இருந்து வர வேண்டும். அந்த அளவு தண்ணீர் கடந்த ஆண்டு வரவில்லை.

  இந்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்ட தண்ணீராவது முழுமையாக வரும் என எதிர்பார்த்திருந்த நீரும் நிறுத்தப்பட்டது.

  இதையடுத்து கடந்த வாரம் முதல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அரசிடம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி ஆந்திர மாநில அதிகாரிகள் கடந்த 27-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர். அந்த தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 10 கன அடியாக அதிகாலை 6.30 மணியளவில் வந்து சேர்ந்தது.

  ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தால் பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை அதிகாலை தண்ணீர் வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai