சுடச்சுட

  

  தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவே மக்களவைக்குச் செல்ல விரும்புகிறேன்

  By dn  |   Published on : 31st March 2014 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vaiko (2)

  தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவே மக்களவைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

  விருதுநகரில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி 320 இடங்களில் வெற்றி பெறும்.

  நெருக்கடி கொடுக்க முடியாத, ஜனநாயகத்தைக் கட்டிக் காக்கும் வகையில் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமையும்.

  இந்த மக்களவைத் தொகுதியில் ஏப். 2-ஆம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அப்போது அவரது வாகனத்தில் நானும் வருவேன்.

  பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரை தூக்கில் இருந்து காப்பாற்றிய வழக்குரைஞர் ராம்ஜெத்மாலனி, பெரியார்தாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் கூட்டம் ஏப். 5-ஆம் தேதி நடைபெறுகிறது. மனிதன் வாழ்வில் ஒருமுறை தான் பிறக்கிறான். அதற்குள் எவ்வளவு நல்லது செய்யலாம்.

  இதுவரை தமிழர்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டப்பேரவை, மக்களவை, தெருக்கள் மற்றும் சாலையோரங்களிலும் போராடியுள்ளேன். தற்போது, மக்களவையில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக மக்களவை உறுப்பினராக செல்ல விரும்புகிறேன். அதை இத்தொகுதி மக்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என நம்புகிறேன் என்றார் வைகோ.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai