சுடச்சுட

    

    தர்க்கசாஸ்திரத்தில் வென்ற ஹரியாணா மாணவர்களுக்கு பரிசு

    By dn  |   Published on : 31st March 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டியில், ஹரியாணாவைச் சேர்ந்த சட்டப்பள்ளி மாணவர் குழுவினர் முதலிடம் பிடித்தனர்.

    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தர்க்கசாஸ்திரம் என்ற பெயரில் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் உள்ள சட்டப்பள்ளிகளைச் சேர்ந்த 26 சட்ட மாணவர்கள் குழுவினர் பங்கேற்றனர்.

    சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பங்கு வருமானத்தின் மீதான வரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

    மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், வருமானவரித் துறை ஆணையர் ரஜீப்ஹோடா ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்தனர்.

    இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த ஜிண்டால் குளோபல் சட்டப்பள்ளி மாணவர்கள் குழுவினர் போட்டியில் முதலிடத்தையும், நொய்டா சிம்போசிஸ் சட்டப்பள்ளி மாணவர்கள் குழுவினர் 2-ஆம் இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பரிசு வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai